Friday, February 1, 2019

ORU MAGIMAYIN MEGAM LYRICS

ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே

விலகாத மேகம் நீர்
முன்செல்லும் மேகம் நீர்

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல
ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே - மகிமையின்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல
ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

என் பேச்சில என் மூச்சில
என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க
என் நினைவில என் நடத்தையில
என் நினைவில என் உயிரில கலந்திருக்கீங்க

அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா

NANDRI MARANDHAEN NEER SEIDHA LYRICS

நன்றி மறந்தேன்
நீர் செய்த நன்மை மறந்தேன்
பாவியாம் என்னை
இரட்சித்த அன்பை மறந்தேன்  x 2 times
உம்மை விட்டு தூரம் போனேன்
என்கரம் பிடித்ததேன்
உந்தன் அன்பை என்ன சொல்ல
என் தெய்வமே

நன்றி ஐயா இயேசுவே நன்றி
தேற்றரவாளனே உமக்கே நன்றி

1. பாவிஎன்றென்னை தள்விடாமல்
அனைத்துக்கொண்டீர் என் தொய்வமே
நன்றி ஐயா இயேசுவே நன்றி
தேற்றரவாளனே உமக்கே நன்றி x 2 times

2. தனிமையிலே துவண்டபோது
துணையாக வந்தீர்
தாயிலும் அன்பு வைத்தீர்
என் தெய்வமே
நன்றி ஐயா இயேசுவே நன்றி
தேற்றரவாளனே உமக்கே நன்றி x 2 times

Thursday, January 31, 2019

UMMAI NESIKKA KATRU THAROOM LYRICS

உம்மை நேசிக்க கற்று தாரும்
உள்ளத்தால் முழு பெலத்தால்
உம்மை நேசிக்க கற்று தாரும்

உலகை மறந்து உம்மை நேசிக்க
என்னை மறந்து உம்மை நேசிக்க
சிலுவை சுமக்கையில் நேசிக்க
மரணம் சந்திக்கையில் நேசிக்க


துன்பமான நேரத்தில் நேசிக்க
இன்பமான நேரத்தில் நேசிக்க
கண்ணீரின் மத்தியில் நேசிக்க
தனிமையான நேரத்தில் நேசிக்க

ISRAVELIN DEVANAGIYA KARTHAVAE LYRICS

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கொப்பான தேவன் இல்லை -2

1.வானத்தையும் பூமியையும்
உண்டாக்கின தேவன்
நச்சத்திரங்களை பெயர் சொல்லி
அழைத்த தேவன் - (2)

உமக்கு சிலைகள் இல்லையே
உம் கையில் ஆயுதம் இல்லையே

2. பூமியின் தூளை மரக்காலால்
அளந்த தேவன்
காற்றையும் தம் வார்த்தையால்
அடக்கின தேவன் (2)

3. மண்ணினாலே என்னையும்
உருவாக்கின தேவன்
தன் சுவாசத்தால் ஜீவனை
கொடுத்த தேவன் (2)

THALAI SAIKKUM KAL LYRICS


 தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா

ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்

மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதி
பூமியின் தூளைப்போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு

பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்
என்று ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு

செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர்
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு

THAAI POLA THETRI THANDHAI LYRICS

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா

மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா

பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா

தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா

MANNA NAMBI MARAM IRUKKU LYRICS

மண்ணை நம்பி மரம் இருக்கு
மழையை நம்மி பயிரிருக்கு
உன்னை நம்பி நானிருக்கேன் ராசாவே
உம்மை தேடி ஓடி வருபவரை ராசாவே - நீர்
ஒரு போதும் தள்ளிடாத நேசரே

1.பறவை வானில் பறக்க தன் சிறகை நம்பி இருக்கு
சிறகில்லாத பறவை அது தரையில் விழுந்து கிடக்கு
அற்பமான பறவை என்று மனிதன் நினைக்கக் கூடும்
அந்த பறவையையும் பாதுகாக்க உந்தன் கண்கள் தேடும்
உம்மை நம்பி வந்தவர்கள் கெட்டுப் போனதில்லை
கெட்டு போக நினைப்பவர்கள் உம்மை நம்புவதில்லை
உம்மை நம்பி நானும் வந்தேன் ராசாவே
உம்மை ஒரு போதும் பறப்பதில்லை ராசாவே
- மண்ணை நம்பி மரம் இருக்கு

2.மனிதரன்பு போதுமென்று மனசுக்குள்ளே நெனச்சேன்
மாயை மாயை என்றறிந்து மனம் பதறி துடிச்சேன்
நாசியில் சுவாசம் உள்ளவனை நம்பாதே என்று சொன்னீர்
நம்பிமோசம் போனதாலே சிந்துகிறேன் கண்ணீர்
இயேசுவே உம்மை நம்பி நானும் வந்தேன்
கெட்டுப் போனதில்லை - வாழ்வில்
உயர உயர சென்ற போதும் உம்மை - விடுவதில்லை
உம்மை நம்பி நானும் வந்தேன் ராசாவே
உம்மை ஒரு போதும் மறப்பதில்லை ராசாவே
- மண்ணை நம்பி மரம் இருக்கு

3.தஞ்சம் இன்றி தவிக்கும் போது தாங்க ஓடி வருவீர்
அஞ்சிடாதே என்று சொல்லி ஆறதலைத் தருவீர்
கெஞ்சி அழும்பக்தரிடம் கொஞ்சிப் பேசி மகிழ்வீர்
மிஞ்சும் பாரமெல்லாம் பஞ்சைப் போல துக்கி எறிவீர்
நம்பிக்கை நங்கூரம் நம்மை இரட்ச்சிக்கின்ற தெய்வம்
நன்மைதனை செய்து என்னை வாழ வைத்த தெய்வம்
உம்மை நம்பி நானும் வந்தேன் ராசாவே
உம்மை ஒரு போதும் மறப்பதில்லை ராசாவே
- மண்ணை நம்பி மரம் இருக்கு