Tuesday, August 25, 2015

THOTHIRAM PAADIYE POTTRIDUVEN

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்

சரணங்கள்

1. அற்புதமான அன்பே --- என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே --- தோத்திரம்

2. ஜோதியாய் வந்த அன்பே --- பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்விய மதுர அன்பே --- தோத்திரம்

3. மாய உலக அன்பை நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே --- தோத்திரம்

4. ஆதரவான அன்பே --- நித்தம்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னதமாம் தேவ அன்பே
உள்ளம் கவரும் அன்பே --- தோத்திரம்

5. வாக்கு மாறாத அன்பே --- திரு
வார்த்தையுரைத் தென்னைத் தேற்றும் அன்பே
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே --- தோத்திரம்

NADU KULIR KAALAM LYRICS

1. நடுக் குளிர் காலம்
கடும் வாடையாம்;
பனிக்கட்டிபோலும்
குளிரும் எல்லாம்,
மூடுபனி ராவில்
பெய்து மூடவே;
நடுக் குளிர் காலம்
முன்னாளே.

2. வான் புவியும் கொள்ளா
ஸ்வாமி ஆளவே,
அவர்முன் நில்லாது
அவை நீங்குமே;
நடுக் குளிர் காலம்
தெய்வ பாலர்க்கே
மாடு தங்கும் கொட்டில்
போதுமே.

3. தூதர் பகல் ராவும்
தாழும் அவர்க்கு,
மாதா பால் புல் தாவும்
போதுமானது;
கேருபின் சேராபின்
தாழும் அவர்க்கே
தொழும் ஆடுமாடும்
போதுமே.

4. தூதர் தலைத்தூதர்
விண்ணோர் திரளும்
தூய கேரூப்ப சேராப்
சூழத் தங்கினும்,
பாக்கிய கன்னித் தாயே
நேச சிசு தான்
முக்தி பக்தியோடு
தொழுதாள்.

5. ஏழை அடியேனும்
யாது படைப்பேன்?
மந்தை மேய்ப்பனாயின்
மறி படைப்பேன்
ஞானி ஆயின் ஞானம்
கொண்டு சேவிப்பேன்;
யானோ எந்தன் நெஞ்சம்
படைப்பேன்.

ELAIKKU PANGALARAM PAAVIKKU RATCHAGARAM

ஏழைக்கு பங்காளராம் பாவிக்கு இரட்சகராம்
ஏசு என்னும் திருமகனாம் இதயத்திலே வாழ்பவராம்

1. மரியாள் வளர்த்த மைந்தன் மனித தெய்வம் அவதரித்தார்
மாடுகட்டும் தொழுவத்திலே மாணிக்கம் பிறந்ததம்மா
அந்தி வானம் சிவக்குதம்மா அல்லி மலர் சிரிக்குதம்மா
ஆண்டவராம் இயேசு பிரான் அன்பு மணம் மணக்குதம்மா

2. முள்முடி சூட்டி வந்த முதல் தலைவன் இயேசுவுக்கு
கல்வாரி சிலுவையிலே காயம் பட வைத்தனரே
உயிர் மரித்தெழுந்த எங்கள் உத்தமரே இயேசு ஐயா
நீர் இன்றி உலகத்திலே நீதி தெய்வம் வேறு உண்டோ?

NANDRIYAL PAADIDUVOM NALLAVAR YESU

நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே

1. செங்கடல் தனை நடுவாய்ப் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியதே இந்நாள் வரையும்
தயவாய் மாதயவாய் --- நன்றியால்

2. மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய
மாபெருங்கிருபை
மாநிலத்தோர்க் கீந்தார்
இயேசு சுவிசேஷ ஒளியாய் --- நன்றியால்

3. உயிர்ப்பித்தே உயத்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்தரராயிருக்க
கிருபையாய் ஈவாய் வரும் காலங்கள்
விளங்க ஒளி விளங்க --- நன்றியால்

4. அழைக்கப்பட்டோரே உன்னத அழைப்பினை
அறிந்தே வந்திடுவீர்
அளவில்லாத்திரு ஆக்கமிதனை
அவனியோர்க்களிப்பீர் --- நன்றியால்

5. சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு
இராஜனாய் சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே
இயேசுவின் முகமே --- நன்றியால்

NAMADHU YESU KRISTHUVIN NAAMAM

1. நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
நானிலமெங்கும் ஓங்கிடவே
புனிதமான பரிசுத்த வாழ்வை
மனிதராம் எமக்களித்தார்

பல்லவி

தேவ கிருபை எங்கும் பெருக
தேவனை ஸ்தோத்திரிப்போம்
பாவ இருள் அகல
தேவ ஒளி அடைந்தோம்
2. அவரை நோக்கி கூப்பிடும் வேளை
அறிவிப்பாரே அற்புதங்கள்
எனக்கெட்டாத அறிந்திடலாகா
எத்தனையோ பதிலளித்தார் --- தேவ

3. பதறிப்போன பாவிகளாக
சிதறி எங்குமே அலைந்தோம்
அவரை நாம் தெரிந்தறியோமே
அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார் --- தேவ

4. பலத்த ஜாதி ஆயிரமாக
படர்ந்து ஓங்கி நாம் வளர
எளிமையும் சிறுமையுமான
எமக்கவர் அருள் புரிவார் --- தேவ

5. நமது கால்கள் மான்களைப் போல
நடந்து ஓடிப் பாய்ந்திடவே
உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே
உன்னதமான ஊழியத்தில் --- தேவ

6. பரமனேசு வந்திடும் போது
பறந்து நாமும் சென்றிடுவோம்
பரமனோடு நீடூழி வாழும்
பரம பாக்கியம் பெறுவோம் --- தேவ

NAM DEVANAI THUTHITHUPPADI



நம் தேவனைத் துதித்துப்பாடி
அவர் நாமம் போற்றுவோம்

களிகூர்ந்திடுவோம் , அகமகிழ்ந்திடுவோம்
துதி சாற்றிடுவோம் , புகழ் பாடிடுவோம்
அவர் நாமம் போற்றுவோம்

1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
அவர் நாமம் போற்றுவோம்
துன் மார்க்க வாசம் முற்றும் நீக்கி
அவர் நாமம் போற்றுவோம் --- களிகூர்ந்திடுவோம்

2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
அவர் நாமம் போற்றுவோம்
நல் ஆவியின் கனிகள் ஈந்து
அவர் நாமம் போற்றுவோம் --- களிகூர்ந்திடுவோம்

3. மேலோக தூதர் கீதம் பாடி
அவர் நாமம் போற்றுவோம்
பேரின்ப நாடு தன்னில் வாழ
அவர் நாமம் போற்றுவோம் --- களிகூர்ந்திடுவோம்

NANBI VANTHEN MESSIAH NAAN NANBI VANTHENE

நம்பிவந்தேன் மேசியா, நான் நம்பிவந்தேனே - திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பிவந்தேனே

சரணங்கள்

1. தம்பிரான் ஒருவனே, தஞ்சமே தருவனே - வரு
தவிது குமர குரு பரமனுவேலே, நம்பிவந்தேனே --- நான்

2. நின்பாத தரிசனம் அன்பான தரிசனம் - நித
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே --- நான்

3. நாதனே, கிருபைகூர், வேதனே, சிறுமைதீர் - அதி
நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே --- நான்

4. பாவியில் பாவியே, கோவியில் கோவியே - கன
பரிவுடன் அருள்புரி, அகல விடாதே, நம்பிவந்தேனே --- நான்

5. ஆதி ஓலோலமே பாதுகா காலமே - உன
தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த நம்பிவந்தேனே --- நான்