Saturday, March 28, 2020

UMMEL VAANJAIYAI IRUPATAHANAL

உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்
உந்தன் நாமத்தை அறிந்ததனால்
வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில்

இயேஷுவா இயேஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம்
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்க்குள் சுகம் காணுவேன்
ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு
பதில் அளிப்பீர் வெகு விரைவில்
என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்
தலை நிமிர செய்திடுவீர்
வேடனின் கண்ணி பாழாக்கும்
கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர்
உமது சிறகுகளாலே என்னை மூடி
மறைத்துக் கொள்வீர்

KAARIYATHAI KAIKOODI VARAPPANNUVAR

காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்
சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் — & 2
இது கிருபையின் நேரம், மகிமையின் ஆண்டு
காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 2
அல்லேலூயா அல்லேலுயா
காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 4

1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரே
கேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே & 2
கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரே
கண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரே
இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2)

2. வலது இடது பக்கம் பெருக கிருபை செய்திடுவாரே
புதிய ஆசீகளை பிரதிஷ்டை செய்து தந்திடுவாரே & 2
கடனே இல்லாமல் அள்ளிக்கொடுக்க வைத்திடுவாரே
இனி வெட்கம் இல்லாம தலை நிமிரச் செய்திடுவாரே
இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2)

THAGUVATHU THONAATHU YERKINDRAVAR

தகுவது தோணாது ஏற்கின்றவர்
வல்லது எதுவென்று நாடாதாவர்
வாடிப்போனோரை நாடித்தான் சென்று
மூடிச்சிறகினில் காப்பவர்
அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ..
என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார்
என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா
பல்கால் யாக்கையில்
என் கால் தவறியும்
ஒருக்கால் விலகாது
மால்வரை சுமந்தார்-2
வழி தொலை கொடுத்தாய்
உழிதனை இழந்தாய் என
பழி சொல்லும் மாந்தர் முன்
செழி என ததும்பிடும் எந்தை
ஏகாதாவர்…….
ப நி ச ரி ம ப….
ரி க க ரி ம க ரி….

UM SITHTHAM DEVAA NADAPIYUM

உம் சித்தம் தேவா, நடப்பியும்
நான் ஓர் மண்பாண்டம்
உம் கையிலும்
உம் பாதத்தண்டை காத்திருக்கும்
என்னை உம் சித்தப்படி மாற்றும்

2. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
என் இதயத்தை ஆராயுமே
உம் சமூகத்தில் தாடிநந்திருக்கும்
என்னைக் கழுவிச் சுத்தம் செய்யும்

3. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
காயப்பட்ட என்னை நோக்குமே
எல்லாம் வல்ல என் ஆண்டவரே
என்னைத் தொட்டுக் குணப்படுத்தும்

4. உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
முற்றிலும் என்னை ஆட்கொள்ளுமே
கிறிஸ்துவின் ஜீவன் வெளிப்பட
என்னை உம் ஆவியால் நிரப்பும்!

UM SITHTHAM NIRAIVERA

உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர்
இயேசுவே உம் சித்தம் செய்திட என்ன
படைக்கிறேன் இயேசுவே

உங்க முகத்தைப் பார்க்கனும்
இன்னும் உமக்காய் எழும்பனும்
உங்க கூட பேசணும்
என்னைத் தருகிறேன் இயேசுவே

பாவம் செய்தேன் பரிசுத்தம் வெறுத்தேன்
உம்மை விட்டு தூரப் போனேன்
உம் அன்பை எனக்கு தந்தீரே
உம் மகனாய் என்னை மாற்றினீரே

உலகின் அன்பு எல்லாம் மாறின போதும்
மாறாது ஒருபோதும் உம் அன்பு
சிலுவையில் பலியானீரே
என்னை உயர்த்தி வைத்தவரே
ஆராதனை என் இயேசுவுக்கே

Sunday, March 8, 2020

ELUNTHAR IRAIVAN JEYAME

எழுந்தார் இறைவன் – ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்

1. விழுந்தவரைக் கரையேற்றப் – பாவத்
தழுந்து மனுக்குலத்தை மாற்ற – விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற – எழுந்தார்


2. செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ
பக்தர் யாவரும் களிக்க – எழுந்தார்


3. கருதிய காரியம் வாய்க்கத் – தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
இரு திறத்தாரையும் சேர்க்க – எழுந்தார்


4. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
பூவின் மீதுசபை செழிக்க – எழுந்தார்


5. ஏதுந் தீவினை செய்யாத் தூயன் – எப்
போதுமே நன்மைபுரி நேயன் – தப்
பாது காத்திடும் நல்லாயன் – எழுந்தார்

GEETHAM GEETHAM JAYA JAYA

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கை கொட்டிப் பாடிடுவோம் -இயேசு
ராஜன் உயிர்த்தெழுந்தார் -அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்

பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
புரண்டுருண்டோடுது பார் - அங்கு
போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ
தேவ புத்திரர் சந்நிதி முன்

வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுவோம் -தாம்
கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு

அன்னா காய்பா ஆசாரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார் -இன்னா
பூதகணங்கள் இடி ஒலி கண்டு
பயந்து நடுங்குகின்றார்

வாசல் நிலைகளை உயிர்த்தி நடப்போம்
வருகின்றார் ஜெய வீரர் - நம்
மேளவாத்தியம் கைமணி பூரிகை
எடுத்து முழுங்கிடுவோம்