Friday, December 18, 2015

Maa paviyam ennaiyum

மா பாவியாம் என்னையும்-உம்
அன்பால் அணைத்தீரே
என் இயேசு ராஜா நன்றி-தம் சித்தம்
நிறைவேற உம் இரத்தம் தந்தீரே
என் இயேசு ராஜா நன்றி

குயவன் கையில் களிமண் போல
என்னைக் கொடுத்தேன்
பரிசுத்தமாய் என்னை வனையும்
ஆத்மபாரம் தந்து என்னை இன்றே நிரப்பும்
உம் ஊழியம் செய்ய என்னை அனுப்பும்

அனுப்பும்(2) உம் சேவை செய்திடவே
அனுப்பும்(2) எம் தேசம் சந்திக்கவே

இருள் சூழும் இடம் என்னை இன்றே அனுப்பும்
அழியும் மாந்தர் சந்திக்க
நரகாக்கினை நின்று ஜனம் இரட்சிக்க
அபிஷேகம் தந்து என்னை அனுப்பும்

No comments: