Monday, November 18, 2019

ANBE MANIDHA URUVAMAI

அன்பே மனித உருவமாய்
அவதரித்தார், நம்மில் பிறந்தார்
என்றும் இம்மானுவேலராய்
தோன்றினார், நம்மில் வாழ்கின்றார்

அவர் நாமம் உயர்த்தி பாடிடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா (2)
அவர் மகிமையை எங்கும் பறைசாற்றுவோம்
அல்லேலூயா அல்லேலூயா (2)

வானத்தில் வெளிச்சம் தோன்றியதும்
அந்த மகிமை இருளை நீக்கியது
நம் வாழ்க்கையின் இருளை நீக்கிடவே
அந்த ஒளியை நமக்காய் தந்தாரே
அவர் அன்பை ருசித்த நாமும்
அந்த ஒளியில் தினமும் வாழ்ந்திடுவோம்

Verse 2
நம்மை ஐஸ்வரியனாய் மாற்றிடவே
அவர் ஏழையின் கோலமாய் பிறந்தாரே
மண்ணில் குப்பையாய் இருந்த மானிடரை அவர்
மனிதனாய் நிற்க செய்தாரே
அவர் கிருபை பெற்ற நாமும்
அவர் ராஜ்யத்தை கட்டிட உதவி செய்வோம்

THENTRAL KAATAE VEESU

தென்றல் காற்றே வீசு
இயேசுவோடு பேசு
மனு மைந்தனாய் அவதாரமோ
மரி பாலனாய் அதி ரூபனோ
அதிகாலை அதிசயமோ
அதிகாலை அதிசயமோ
தென்றல் காற்றே வீசு

யூத ராஜன் இவர்தானோ
யாரோ யாரோ யாரோ யாரோ
மனுவேலன் இவர் பேரோ
யாரோ யாரோ யாரோ யாரோ
ஆதியும் அந்தமும் இவர்தானோ
நீதியின் சூரியன் இவர்தானோ
நல்ல ஜீவ அப்பமும் இவர்தானே
பணிந்து போற்றுவோம்
மெய் ஜீவ நதியும் இவர்தானே
இயேசுவைப் புகழுவோம்
- தென்றல் காற்றே

முற்றிலும் அழகு உள்ளவரோ
யாரோ யாரோ யாரோ யாரோ
அற்புதம் செய்யும் வல்லவரோ
யாரோ யாரோ யாரோ யாரோ
பரலோகப் பிதாவின் தாசன் அன்றோ
ஆத்மாவுக்குகந்த நேசரன்றோ
எம்மை மீட்கும் மீட்பர் இவர்தானே
இவரைப் புகழுவோம்
எம்மை மேய்க்கும் மேய்ப்பனும் இவர்தானே
பணிந்து போற்றுவோம்
- தென்றல் காற்றே

தேற்றும் தேவன் இவரன்றோ
யாரோ யாரோ யாரோ யாரோ
தேற்றரவாளன் இவரன்றோ
யாரோ யாரோ யாரோ யாரோ
முன்னவர் சொன்னவர் இவர்தானோ
முன்னணை மன்னவர் இவர்தானோ
பாவ இருளை நீக்கும் ஒளி தானே
இவரை ஆராதிப்போம்
நம்மை மீட்கும் இரட்சிப்பின் வழிதானே
புகழ்ந்து ஆர்ப்பரிப்போம்
- தென்றல் காற்றே

THOLAINDHU PONA AADAI POLA

தொலைந்துபோன ஆடை போல தனியாகினேன்
தவறான பாதையில் போய் தடுமாறினேன்
திரளான தீமையில் சென்று தீ ஆகினேன்
திருக்கரத்தால் என்னை தாங்க தேடுகிறேன்

பிழை மட்டும் இருக்கும் என் வாழ்வில்
பிள்ளை என்று சொல்லி அழைக்க
இருள் மூழ்கி நிலை இல்லாமல் நான் நிற்கவே-2
என் உயிரே நீர் கரம் பிடிக்கவே
உம் கரத்தைப் பிடித்து நான் நடக்கவே

என் உயிரே என் உயிரே என் கண்கள் பார்க்கும்
உம் சிலுவையில் அடிக்கப்பட்ட கரத்தையே
என் உயிரே என் உயிரே என் கண்கள் பார்க்கும்
முள் கிரீடம் சுமந்த உந்தன் அன்பையே

உம் அடியின் தழும்புகளை நான்
தள்ளாடி சுமக்கும் என் சிலுவையே
இமை உள்ளில் உம் கண்களாய் நான் நிற்கவே-2
கல்வாரியில் என்னை பார்த்து சிரிக்கவே
நான் பாவியாய் உன் அன்பை மறக்கவே

என் உயிரே என் உயிரே என் கண்கள் பார்க்கும்
உம் சிலுவையில் அடிக்கப்பட்ட கரத்தையே
என் உயிரே என் உயிரே என் கண்கள் பார்க்கும்
முள் கிரீடம் சுமந்த உந்தன் அன்பையே

கலங்கி நின்ற நேரங்களில்
என் நிழலும் என்னை விட்டு விலக
காணாமல் காண்கிறேன் உம் பாசத்தை-2
இப்பாவியை நீர் நேசிக்கவே
அது ஏன் என்று நான் கேட்கவே

என் உயிரே என் உயிரே என் கண்கள் பார்க்கும்
உம் சிலுவையில் அடிக்கப்பட்ட கரத்தையே
என் உயிரே என் உயிரே என் கண்கள் பார்க்கும்
முள் கிரீடம் சுமந்த உந்தன் அன்பையே

NEER MANUSHANALLA DEVAN

நீர் மனுஷனல்ல தேவன்
மன உருக்கமுள்ள தேவன்
காயப்பட்ட தோளின் – சுமையை
முறிக்கும் தேவன்

1. இஸ்ரவேலின் தேவனே
என்னை ஆசிர்வதியும்
எல்லை பெரிதாக்கிடூம் – உம்
கரம் என்னோடிருக்கட்டும்
தீங்குகள் என்னை வேதனைப்படுத்தாமல்
அதற்கென்னை விலக்கி காத்திடும் -நீர்

2. பாவங்களை நினைத்தால்
யார் நிலை நிற்கமுடியும் – நீர்
சாபங்களை முறித்தால் – நான்
தொடர்ந்து ஓடமுடியும்
இரவின் காவலர் விடியலை நோக்கிடும்போல்
என் ஆத்துமா உமக்காய் ஏங்குதே – நீர்

3. நீதி செய்யும் என் தேவனே
எழுந்திருக்க மாட்டிரோ?
எதிர் நிற்க பெலனில்லை – என்ன
செய்வதென்றும் தெரியவில்லை
உம் உதவியைத் தவிர வேறொன்றும் எனக்கில்லை
என் கண்கள் உம்மையே பார்க்குதே – நீர்

VENPANI SINDHUM MUN

வெண்பனி சிந்தும் முன் பனி காலம்
சில்லெனும் காற்றையும் வீசுமே
என் விழி என்றும் என் விழி என்றும்
உம் முகம் பார்க்கவே ஏங்குதே
என் நெஞ்சம் ஈரமானதே
உள்ளன்பால் காதலானதே
உம் அன்பில் நனைந்து போனதே
இயேசுவே…. இயேசுவே… ஹோ..-வெண்பனி

பார்க்க பார்க்க ஆனந்தம்
பாதம் தீண்ட ஆனந்தம்
மௌனமான நேரத்தில்
கண்கள் பாடும் ராகத்தில்
கோடி கோடி எண்ணங்கள்
வாட்டுகின்ற நேரத்தில்
பாரமான இதயத்தில்
தேவன் சேரும் நேரத்தில்
நமக்காகவே வழக்காடுவார்
என்றென்றும் அன்போடு தாங்குவார்-வெண்பனி

காற்றும் நீரும் தாலாட்டும்
காதல் கொண்டு வந்தாடும்
இனிமையான சாமத்தில்
உம்மை தேடும் நேரத்தில்
கூட்டம் சேர்ந்து கொண்டாடும்
ஏக்கத்தோடு பண்பாடும்
சாலையோர தென்றலும்
மெல்ல தேடும் உம் முகம்
கலங்காமலே இருப்பாய் என
நம் தேவன் அன்போடு சொல்கிறார்-வென்பனி

THAMANDAI VANTHA BAALARAI

தம்மண்டை வந்த பாலரை 

1. தம்மண்டை வந்த பாலரை
ஆசீர்வதித்த ரட்சகர்,
இப்போதும் சிறுவர்களை
அணைக்கத் தயையுள்ளவர்.

2. ஆ, இயேசுவே, இப்பிள்ளையை
அணைத்து ஏந்தியருளும்
அளவில்லாசீர்வாதத்தை
அன்பாகத் தந்திரட்சியும்.

CHINNACHIRU KULANTHAIYAI PIRANTHAR

சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்! இயேசு பிறந்தார்!
பாவத்தைப் போக்க, பயமதை நீக்க, பாலகனாய்ப் பிறந்தார்

1. மேய்ப்பர்கள் வந்தனரே! மிக வேகமாய் வந்தனரே!
சாஸ்திரிகள் வந்து சாஷ்டாங்கம் செய்து பணிந்து கொண்டனரே!

2. வாருங்கள் மானிடரே! இயேசுவின் பின் செல்லவே!
சிலுவையை எடுத்து, சுயத்தை வெறுத்து, பின் செல்லுவீர் என்றுமே!