Thursday, February 7, 2019

EN SUVASA KATRE LYRICS

என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே
இறைவா என் உள்ளம் வருவாய்
என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே
தலைவா நீ உன்னைத் தருவாய் 

என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே
இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய் 

என் சொந்தம் யாவும் என் தேவை யாவும்
நீதானே நீதானே இறைவா
என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்
தருவாயே தருவாயே தலைவா
வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே
வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே - 2
வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய் 

எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை
அறிவேனே அறிவேனே இறைவா
உனைப் போல நானும் பிறரன்பில் வளர
அருள்வாயே அருள்வாயே தலைவா
மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே
ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே - 2
நிழலாய் நிறைவாய் வாழ்வினில் வருவாய் 

IDAIVIDA SAHAYA MATHA LYRICS


இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா 
பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள் 
நிதம் துணை சேர்ப்பாயே - 2

ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் - அன்னை 
தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் - 2 
மாறாத கொடுமை நீங்காத வறுமை 
தானாக என்றுமே மாற்றிடுவாள் - 2

கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி 
உள்ளம் திறந்து சொல் உன் கதையை - 2 
வெள்ளம் போல அருள் கருணை பாய்ந்திட 
தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய் - 2

ITHAYAM MAKIZHUTHAMMA LYRICS

இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா
உள்ளமும் துள்ளுதம்மா – உந்தன்
தாய்மையின் நினைவாலே அம்மா

தாயெனும் போதினிலே மனம் தானுன்னைத் தேடுதம்மா – 2
ஈன்ற தாயும் போற்றும் உந்தன்
பாதம் பணிந்திடுவேன் அம்மா...!

வாழ்வெனும் பாதையிலே ஒளி விளக்காய் நீ இருப்பாய் – 2
உண்மை மனதும் உயர்ந்த நெறியும்
நிறைந்து வாழ்ந்திடுவேன் அம்மா...! 

NEE ILLATHA ULLAM OOR LYRICS

நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம்
எந்நாளும் உனக்காக ஏங்கும் மனம்   (2)
 

இறைவா இறைவா இறைவா இறைவா 

மழையாக வந்தும் மனம் மீது நின்றும் நனையாத நிலமாகினேன்
ஒளியாக நிறைந்தும் வாழ்வோடு இணைந்தும்
விடிவில்லா இரவாகினேன்  (2)
உயிரூட்டும் அருள்மேகம் எனைச் சூழுமோ
வாழ்வேற்றும் ஒளிவெள்ளம் எனை ஆளுமோ  (2) -இறைவா 

கண்ணீரில் மூழ்கி போராடும் நிலைபோல்
தவிக்கின்றேன் உனைத் தேடியே
போர் வந்த காலம் துடிக்கின்ற புவிபோல்
அழுகின்றேன் துணை நாடியே   (2)
எதனாலும் நிறையாத வெறுமையிது - உன்
அருளின்றி துயிலாத இதயம் இது   (2) -இறைவா 

KALANGARAI THEEBAMAE LYRICS

கலங்கரை தீபமே கலங்களின் தாரகையே

துலங்கிடும் மணியே கலங்குவோர் கதியே
காத்திடுவாய்த் தாயே --2

மாதர்களின் மாதிரியே மாயிருளில் ஒளி தாரகையே
மாதரசியே மன ஒளி தாராய் மாசு அகலச் செய்வாய்

தாயெனவே தாவிவந்தோம் சேயெனவே எமைச் சேர்த்திடுவாய்
பாவி என் உள்ளம் தாயுனைத்தேடி கூவிடும் குரல் கேளாய்

VIDIYALAI THEDUM NENJANKALAE LYRICS

விடியலைத் தேடும் நெஞ்சங்களே
விடியாக் கனவின் சொந்தங்களே --2
நமக்கொரு தாய் இருக்கின்றாள்
வாருங்கள் அவளிடம் செல்வோம் --2

இருள் சூழும் உலகினிலே ஒளிதேடி அலையுது நெஞ்சம்
கீழ்வானம் சிவக்குமென்று உறங்காது ஏங்குது நெஞ்சம் --2
தாயவள் அழகு பொற்சித்திரம்
கீழ்வானின் நம்பிக்கை நட்சத்திரம் --2

புயலாக துன்பங்களும் இதயத்தின் கரையினில் மோதும்
மலராத மொட்டுகளாய் இதயத்தில் இன்பங்கள் வாழும் --2
வாழ்வினில் என்றும் போராட்டமே
தாயவள் அன்பில் தேரோட்டமே என்றும் தேரோட்டமே

EN AANMA ENNALUMAE LYRICS

என் ஆன்மா எந்நாளுமே
ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது
என் மீட்பரை நினைத்து நினைத்து
எந்தன் நெஞ்சம் மகிழுகின்றது  -2

ஏழைகளை எளியவரை உயர்த்தினார்  -பல
இன்னல்படும் உள்ளங்களைத் தேற்றினார்  -2
செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார்  -2 நெஞ்சில்
செருக்குற்ற மனிதரையே சிதறடித்தார்  -2

அடிமைகளை அன்புடனே நோக்கினார் -அவர்
ஆள்பவரின் ஆணவத்தை நீக்கினார்  -2
தாழ்ந்தோரை மேன்மையாக உயர்த்தினார்  -2 வாழ்வில்
வீழ்ந்தோரைக் கருணையினால் ஆதரித்தார்  -2