Wednesday, December 23, 2015

Paraloga Devana Ummai arathanai

பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்
பரலோக ராஜனே உம்மை ஆராதனை செய்கிறோம்
உமது அன்பின் கரங்களை நான் கண்டேனே - (2)
நான் கண்டேனே, நான் கண்டேனே

சரணங்கள்

1. மோசேயின் தேவனே
என்னை வழி நடத்திடுவீர் --- உமது அன்பின்

2. யோசுவாவின் தேவனே
எங்கள் மதில்களை நொறுக்குவீர் --- உமது அன்பின்

3. தேவாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்
ராஜாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்

Parisutha Devan Neere vallamai devan

பரிசுத்த தேவன் நீரே வல்லமை தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
இயேசுவே உம் நாமத்தை
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
நீர் தேவன் நீர் இராஜா என்றும்

1. கேருபீன் சேராபீன்கள்
உந்தனை தொழுதிடுதே
வல்லமை இறங்கிடவே
உந்தனை தொழுதிடுவோம் --- பரிசுத்த

2. உம்மை போல் தேவன் இல்லை
பூமியில் பணிந்திடவே
அற்புத தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் --- பரிசுத்த

3. மேலான தேவன் நீரே
மேலான நாமமிதே
மாந்தர்கள் பணிகின்றாரே
உம்மையே தொழுதிடுவோம் --- பரிசுத்த

4. சத்திய பாதைகளில்
நித்தமும் நடந்திடவே
உத்தமர் தேவன் நீரே
உம்மையே தொழுதிடுவோம் --- பரிசுத்த

Parolaga Devane parakkiramam


பரலோக தேவனே
பராக்கிரமம் உள்ளவரே (2)
(இந்த) அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது எதுவுமில்லை

1. எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வ வல்ல தெய்வமே (2)

உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் - உம்மை

2. யெஹோவா நிசியே
வெற்றி தந்த தெய்வமே (2)

3. யெஹோவா ராஃப்ஃபா
சுகம் தந்த தெய்வமே (2)

4. எல்ரோயீ எல்ரோயீ
என்னை கண்ட தெய்வமே (2)

Pithave Potri Kumaran Potri

பிதாவே போற்றி, குமாரன் போற்றி
ஆவியே போற்றி, போற்றி, போற்றி

போற்றி, போற்றி - (4) 1. யெகோவாயீரே போற்றி, போற்றி
எல்லாமே பார்த்துக் கொள்வீர் - (2) --- பிதாவே

2. யெகோவா நிசியே போற்றி, போற்றி
எங்களுக்கு வெற்றி தருவீர் - (2) --- பிதாவே

3.யெகோவா ஷாலோம் போற்றி, போற்றி
சமாதானம் தருகின்றீர் - (2) --- பிதாவே

4. யெகோவா ராவ்ப்பா போற்றி, போற்றி
எங்களுக்கு சுகம் தருவீர் - (2) --- பிதாவே

5. யெகோவா ஷம்மா போற்றி, போற்றி
கூடவே இருக்கின்றீர் - (2) --- பிதாவே

Pidha Kumaran Parisutha Aavi

பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம்
திரித்துவ தேவனை துதித்திடுவோம்

1. பாவத்தின் கோர பலியான
சாபங்கள் தன்னில் ஏற்றுக்கொண்டு
பாவிகளுக்காய் ஜீவன் தந்த
தேவ குமாரனை ஸ்தோத்தரிப்போம்

2. நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில்
சேரக்கூடாத ஒளிதனில்
மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும்
பரமபிதாவை ஸ்தோத்தரிப்போம்

3. வல்லமையோடு வந்திறங்கி
வரங்கள் பலவும் நமக்கின்று
ஆவியின் வழியை தினம் காட்டும்
பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம்

Pudhiya Nalukul Ennai Nadathum


புதிய நாளுக்குள் (ஆண்டுக்குள்) என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்

புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா --- புதிய

1. ஆரம்பம் அற்பமனாலும்
முடிவு சம்பூர்ணமாய்
குறைவுகள் நிறைவாகட்டும் - எல்லா
என் வறட்சி செழிப்பாகட்டும் --- புது

2. வெட்கத்துக்கு பதிலாக (இரட்டிப்பு)
நன்மை தாரும் தேவா - (2)
கண்ணீர்க்கு பதிலாக (எந்தன்) - (2)
களிப்பை தாரும் தேவா (ஆனந்த) - (2) --- புது

3. சவால்கள் சந்தித்திட (இன்று)
உலகத்தில் ஜெயமெடுக்க - (2)
உறவுகள் சீர்பொருந்த (குடும்ப) - (2)
சமாதானம் நான் பெற்றிட (மனதில்) - (2) --- புது

Pesu Sabaiye Pesu

பேசு சபையே பேசு (4)

இது உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்
இது தள்ளாடும் முழங்கால்கள் புது பெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்
இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்
இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள் (2) --- பேசு

நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்றுசேரும்
தசைகளும் புதிதாகத் தோன்றும்
ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்
புதுஜீவன் உனக்குள்ளாய் தோன்றும் (2) --- பேசு

மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும் பெருகிடவே
பெருமழை தேசத்தில் பெய்யும்
கல்வாரி இரத்தத்தாலே ஜாதிகள் மீட்கப்பட்டு
கர்த்தரை தெய்வமாக வாழ்த்தும் (2) அதனால் --- பேசு

ஜாதிகள் நடுங்கிடவும் தேசங்கள் உயர்ந்திடவும்
கர்த்தரின் கிரியைகள் தோன்றும்
மரித்தோர் பள்ளத்தாக்கில் துதிக்கின்ற சேனையொன்று
கர்த்தரின் ஜீவன் பெற்று எழும்பும் --- இது உலர்ந்த

ஜீவனை பேசு, இரட்சிப்பை பேசு
சுவாசத்தை பேசு, அற்புதத்தை பேசு (2)

சபையே நீ எழும்பிடு, காற்றே நீ வீசிடு

போற்று சபையே போற்று - இயேசுவை
போற்று சபையே போற்று --- பேசு