Monday, June 29, 2015

ANATHI DEVAN UNN ADAIKKALAME

அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே

அனுபல்லவி

இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்

சரணங்கள்

1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார் --- இந்த

2. கானகப் பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளை
அரும் நீரூற்றாய் மாற்றினாரே --- இந்த

3. கிருபை கூர்ந்து மன துருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கைகளை
உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் --- இந்த

4. இப்புவி யாத்திரை கடந்திடுவாய்
தூய தேவ தயவால்
கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினிலே
கிடைக்கும் இளைப்பாறுதலே --- இந்த

5. வறண்ட வாழ்க்கை செழித்திடுமே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் --- இந்த

6. ஆனந்தம் பாடித் திரும்பியே வா
தூய தேவ பெலத்தால்
சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் --- இந்த

UNTHAN SITHAM POL NADATHUM

உந்தன் சித்தம் போல் நடத்தும்
கர்த்தாவே நீர் நித்தம் என்னை
எந்தன் சித்தம் போல வேண்டாம்
என் பிதாவே என் யெகோவா

இன்பமான வாழ்க்கை வேண்டேன்
இனிய செல்வம் சீரும் வேண்டேன்
துன்பமற்ற சுகமும் வேண்டேன்
நின் தொண்டு செய்யும் அடியேன்

நேர் சமனாம் நின் வழியோ
சிறு துரமோ மாதொலைவோ
எவ்விதத் துயர்கடலோ
ஏழையின் வாழ்வு எதிலும்

அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்
ஆம் இவற்றால் நீர் நடத்தி
அனுதினம் என்னோடிருப்பீர்
ஐயனே கடைக்கனியே

ANTHA NAAL BAKIYA NAAL - NAAN MEETKAPPATTA

அந்த நாள் பாக்கிய நாள் - நான் மீட்கப்பட்ட
அந்த நாள் பாக்கிய நாள்

அனுபல்லவி

அந்தநாள் ஆனந்தநாள், அருமை இரட்சகரென்னை
அன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள் --- அந்த

சரணங்கள்

1. அன்றே எனக்குப் பேதித்தார் - அவர் வழியில்
அநுதினம் செல்லக் கற்பித்தார்;
என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய
ஏவினார் என் இரட்சகர், எங்கும் எடுத்துரைப்பேனே --- அந்த

2. என்றனை அன்றே இழுத்தார்- தமதன்பினால்
இசைவாய்த் தம்முடன் இணைத்தார்;
சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் எனக்கு,
இந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன் --- அந்த

3. ஆறுதல்களால் நிறைந்தேன் - அளவில்லாத
ஆசிகளினால் மகிழ்ந்தேன்;
தாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து
மாறாத யேசுவினில் மகிமையாய்த் தங்கப் பெற்றேன் --- அந்த

4. அந்நாளில் வாக்குப் பண்ணினேன் - உறுதியாக
எந்நாளும் நான் புதுப்பிப்பேன்;
சொன்ன இவ்வாக்கை நிதம் , சுத்தமாய் நிறைவேற்ற
உன்னத பலம் தாராய் , என்னையாட்கொண்ட தேவா --- அந்த

ANATHIYAANA KARTHARE

1. அநாதியான கர்த்தரே,
தெய்வீக ஆசனத்திலே
வானங்களுக்கு மேலாய் நீர்
மகிமையோடிருக்கிறீர்.

2. பிரதான தூதர் உம்முன்னே
தம் முகம் பாதம் மூடியே
சாஷ்டாங்கமாகப் பணிவார்,
'நீர் தூய தூயர்' என்னுவார்.

3. அப்படியானால், தூசியும்
சாம்பலுமான நாங்களும்
எவ்வாறு உம்மை அண்டுவோம்?
எவ்விதமாய் ஆராதிப்போம்?

4. நீரோ உயர்ந்த வானத்தில்,
நாங்களோ தாழ்ந்த பூமியில்
இருப்பதால், வணங்குவோம்,
மா பயத்தோடு சேருவோம்.

ANANTHA KOODI KOOTTATHAR அநந்த கோடி கூட்டத்தார்

1. அநந்த கோடி கூட்டத்தார்
ஆனந்த கீதம் பாடியே,
பண் இசைப்பார் வெண் உடையார்
தெய்வாசனம் முன்னே.
விண்வேந்தர் தயை போக்கிற்றே
மண் மாந்தர் பாவம் நோவுமே;
மேலோகிலே நீர் நோக்குவீர்
உம் நாதர் மாட்சியே.
பாடற்ற பக்தர் சேனையே,
கேடோய்ந்து தூதரோடுமே
பண் மீட்டுவீர்; விண் நாதர்தாம்
தம் வார்த்தை நல்குவார்.

2. மா தாழ்வாய் வாழ்ந்தீர் பாரினில்,
கோதற்ற வெண்மை அணிந்தீர்;
உம் நீதிக்காய் நம் நாதரே
பொற் கிரீடம் சூட்டுவார்;
பூலோக வாழ்வின் கண்ணீரை
மேலோகில் ஸ்வாமி நீக்கினார்;
போம் திகிலும்; உம் மீட்பரின்
நல் மார்பில் சாய்குசீர்
விண் வீட்டினில் மா பந்தியை
மாண் வேந்தரோடு அடைந்தீர்;
நீர் பெற்றீரே பேர் வாழ்வுமே
கர்த்தாவோடென்றுமே.

3. ஆ, வீரர் சூரர் சேனையே,
மா தீரச் செய்கை ஆற்றினீர்,
நீர் சகித்தீர், நீர் ஜெயித்தீர்
நீர் வாழ்க, பக்தரே!
மண் மாந்தர் கீர்த்தி இகழ்ந்தீர்,
விண் வேந்தரோடும் சிலுவை
நீர் சுமந்தீர், நீர் அறுப்பீர்
உம் கண்ணீர் பலனே.
மெய் மணவாட்டி, போற்றுவாய்!
வையகமே முழங்குவாய்!
எம் ஸ்வாமியே, என்றென்றுமே
உம் ஸ்தோத்ரம் ஏறுமே.

MAGIBANAI ANUTHINAME LYRICS

மகிபனையே அனுதினமே
மகிழ்வுடனே துதித்திடுவேன் - தினம்

1. என்னை அன்பில் இணைத்திடவே
கண்டிப்பா உருவாகுமுன்னே
ஜோதியாய் தேவ மகிமையை பெறவே
தேவன் என்னை தெரிந்தெடுத்ததினால் --- மகிபனையே

2. தூதராலும் செய்யவொண்ணா
தூய பணியை அற்புதமாய்
தோசியாலும் செய்திட கிருபை
தூயன் கிறிஸ்து தந்தனரே --- மகிபனையே

3. அழைத்தாரே சுவிஷேசத்தினால்
அடைய தேவ சாயலதை
பயத்துடனே பரிசுத்தமதையே
பாரினில் பூரணமாக்கிடுவோம் --- மகிபனையே

4. ஆவலுடனே காத்திருந்தேன்
சேவை புரிவோம் இயேசுவுக்காய்
ஆசை இயேசு மணவாளன் வருவார்
சீயோனில் என்னை சேர்த்திடவே --- மகிபனையே

KANMANEE NEE KANVALARAI LYRICS


கண்மணி நீ கண்வளராய்
விண்மணி நீ உறங்கிடுவாய்
கண்மணி நீ கண்வளராய்

1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட
நீங்கும் துன்பம் நித்திரை வர
ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட
தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்
கந்தை துணி பொதிந்தாயோ

2. சின்ன இயேசு செல்லப்பாலனே
உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே
என்னைப் பாரும் இன்ப மைந்தனே
உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற
ஏழை மகவாய் வந்தனையோ

3. வீடும் இன்றி முன்னனைதானோ
காடும் குன்றும் சேர்ந்ததேனோ
பாடும் கீதம் கேளாயோ நீயும்
தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய
ஏழ்மைக் கோலம் கொண்டனையோ