Wednesday, November 20, 2019

SONTHAMAKUVOM SUDHANDHARIPPOM

சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் 
இந்தியா இயேசுவுக்கே
காஷ்மீர் முதல் குமரி வரை 
இந்தியா இயேசுவுக்கே 

இயேசுவுக்கே . . . இயேசுவுக்கே . . . 
இந்தியா இயேசுவுக்கே . . . . 
எங்கள் பாரதம் இயேசுவுக்கே . . . 

1 . ஜம்மு காஷ்மீர் இயேசுவுக்கே 
பஞ்சாப் ஹரியானா இயேசுவுக்கே 
ராஜஸ்தான் குஜராத் இயேசுவுக்கே 
இமாச்சல் பிரதேசம் இயேசுவுக்கே

2 . டெல்லி உத்தர்காண்ட் இயேசுவுக்கே 
உத்தர் பிரதேசம் இயேசுவுக்கே 
மத்திய பிரதேசம் இயேசுவுக்கே 
பீகார் ஜார்க்கண்ட் இயேசுவுக்கே 

3 . அருணாச்சல் பிரதேசம் இயேசுவுக்கே 
அஸ்ஸாம் சிக்கிம் இயேசுவுக்கே 
நாகலாந் மணிப்பூர் இயேசுவுக்கே 
மிசோராம் திரிபுரா இயேசுவுக்கே

4 . மேகாலயா வெஸ்ட் பெங்கால் இயேசுவுக்கே 
ஓடிசா சட்டீஸ்கர் இயேசுவுக்கே 
மஹாராஷ்ட்ரா கோவா இயேசுவுக்கே 
கர்நாடகம் கேரளா இயேவுக்கே 

5 . ஆந்திரா தெலுங்கானா இயேசுவுக்கே
தமிழ்நாடு புதுச்சேரி இயேசுவுக்கே 
இலட்சத்தீவுகள் இயேசுவுக்கே 
அந்தமான் நிக்கோபார் இயேசுவுக்கே 

( இதே இராகத்தில் பின்வருமாறு பாடலாம் )

சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் 
தமிழ்நாடு இயேசுவுக்கே
சென்னை முதல் குமரி வரை 
தமிழ்நாடு இயேசுவுக்கே
இயேசுவுக்கே . . . இயேசுவுக்கே . . . 
தமிழ்நாடு . . . இயேசுவுக்கே 
எங்கள் தமிழ்நாடு இயேசுவுக்கே 

1 . சென்னை திருவள்ளூர் இயேசுவுக்கே 
வேலூர் காஞ்சிபுரம் இயேசுவுக்கே 
திருவண்ணாமலை இயேசுவுக்கே 
விழுப்புரம் கடலூர் இயேசுவுக்கே 

2 . கிருஷ்ணகிரி தர்மபுரி இயேசுவுக்கே 
சேலம் நாமக்கல் இயேசுவுக்கே 
ஈரோடு நீலகிரி இயேவுக்கே 
கோவை திருப்பூர் இயேசுவுக்கே 

3 . பெரம்பலூர் அரியலூர் இயேசுவுக்கே 
நாகை காரைக்கால் இயேசுவுக்கே 
கரூர் திருச்சி இயேசுவுக்கே 
கள்ளக்குறிச்சி இயேசுவுக்கே

4 . தஞ்சாவூர் திருவாரூர் இயேசுவுக்கே 
திண்டுக்கல் புதுக்கோட்டை இயேசுவுக்கே 
தேனி மதுரை இயேசுவுக்கே 
சிவகங்கை விருதுநகர் இயேசுவுக்கே

5 . இராமநாதபுரம் இயேசுவுக்கே 
தூத்துக்குடி முத்துநகர் இயேசுவுக்கே 
திருநெல்வேலி இயேசுவுக்கே 
கன்னியாகுமரி இயேசுவுக்கே 

NITCHAYAMAGAVEH NEER ENNAI AASIRVATHIPEER

நிச்சயமாகவே நீர் என்னை ஆசீர்வதிப்பீர்
நிச்சயமாகவே நீர் என்னை பெருகப்பண்ணுவீர்

நம்புவேன் வார்த்தையை
ஆராதிப்பேன் இயேசுவை - (2)

1. திரளான நன்மைகள் எனக்குத் செய்தீர் 
தூய மனதுடன் நன்றி சொல்வேன்... (2)
கடந்ததை நினைத்துப்பார்க்கிறேன்
இழந்ததை திருப்பிக்கொள்ளுவேன்...(2)
( நம்புவேன் இயேசுவை ) 

2. மகிமையான வாழ்க்கையை 
எனக்குத் தந்தீர்
மகிழ்ச்சியோடு நன்றி சொல்வேன்... (2)
எந்தன் சந்ததியை ஆசீர்வதிப்பீர்
எந்தன் சந்தானத்தைப் 
பெருகப்பண்ணுவீர்....(2)
( நம்புவேன் இயேசுவை )

3. நிறைவான வாக்குத்தத்தங்கள்
எனக்குத் வைத்தீர்
மன நிறைவோடு நன்றி சொல்வேன்..(2)
உண்மையாக ஆராதிப்பேன்
நிச்சயமாக ஆசீர்வதிப்பீர்..... (2)
( நம்புவேன் இயேசுவை )

IRAIVA UNTHAN ARASU MALARA ULAIKKA

இறைவா உந்தன் அரசு மலர உழைக்க வருகின்றேன்
ஏழை எளியோர் ஏற்றங் காண என்னைத் தருகின்றேன்
இதயம் மகிழ்ந்து ஏழை என்னை பலியாய் ஏற்றிடுவாய்
கனிவாய் மாற்றிடுவாய்

1. உலகம் யாவும் வெறுமை என்று
உன்னைப் பணிந்தேன் தஞ்சம் என்று
குயவன் கையில் களிமண் போல
உனது பணிக்காய் என்னைத் தந்தேன்
உனக்காய்த் தானே வாழுகின்றேன்
எந்தன் உயிரும் உந்தன் சொந்தம்
தடைகள் மலையாய்ச் சூழ்ந்து கொண்டால்
தயக்கமின்றி எழுந்து நடப்பேன்
ஆபேல் தந்த உயர்ந்த பலி போல்
அன்பே உனக்காய் காணிக்கையாகிறேன்

2. துடுப்பை இழந்த படகைப் போல
தனித்து தவித்துக் கலங்கும் நேரம்
விழியைக் காக்கும் இமையைப்போல
அன்பின் கரத்தால் அணைத்துக் காப்பாய்
முடவன் போல என்னை மாற்ற
தினமும் உழைக்கும் மனிதருண்டு
மண்ணில் விழுந்து மடிந்த பின்னும்
முளைக்கும் விதைபோல் உயிர்த்து எழுவேன்
மழையைத் தேடும் பயிரைப்போல
அன்பே உனையே தேடிவந்தேன்

PAAR ENGUM MAGILDHU AADA

பார் எங்கும் மகிழ்ந்து ஆட
விண் தூதர் இசைந்து பாட
சின்னஞ்சிறு பாலகனாய்
மண்ணில் வந்த மன்னவனாம்
அன்னைமரி பாலகனை போற்றுவோம்

விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் போற்ற 
தேவ மைந்தன் இன்று பிறந்தார்

மேய்ப்பர்கட்கு வானதூதர் செய்தி சொல்லவே
பாலகனை காண அவர்
சென்றனரே
கந்தை துணி கோலமாக
முன்னனையின் மீதினிலே
உலகத்தின் இரட்சகரை தொலுதனரே

வானில் புது விடிவெள்ளி
தோன்றியதே
தேவ மகன் பிறப்பினை
கூறியதே
ஞானிகளும் பின்சென்று
காணிக்கைகள் கொண்டு சென்று
இயேசு பாலன் முன்பாக பணிந்தனர்

KODAKODI STHOETHTHIRAM YEREDUPPOM

இயேசுவில் கெம்பீரிப்போம்!
கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை

1. பரிசுத்தவான்கள் சபை நடுவே
தரிசிக்கும் தேவ சமூகத்திலே
அல்லேலூயா அல்லேலூயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம்

2. கிருபாசனத்தண்டை நெருங்குவோம்
திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்
அல்லேலூயா அல்லேலூயா
கண்டேன் சகாயம் இரக்கமே
கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே

3. குருவி பறவை வானம்பாடியே
கவலையின்றிப் பறந்து பாடுதே
அல்லேலூயா அல்லேலூயா
அற்புதமான சிருஷ்டிகரே
அந்த விசுவாசம் கற்றறிந்தோம்

4. கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்
அல்லேலூயா அல்லேலூயா
ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
அன்றன்று தந்தெம்மை ஆதரித்தீர்

5. கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்
கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
தேவ குமாரன் வந்திடும் நாள்
தூய முகம் கண்டு கெம்பீரிப்போம்

Tuesday, November 19, 2019

YESUVAE EN YESUVAE

இயேசுவே என் இயேசுவே
நீர் இல்லாமல் எனக்கு யாருண்டு

நான் செய்த பாவங்கள் பல ஆயிரம்
உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீரே
நன்றி இயேசுவே -4

பெலனில்லாமல் நான் நின்ற வேளையில்
உம் பெலத்தாலே என்னை தாங்கி கொண்டீரே
உம் பெலன் போதுமே -4

பாதை தெரியாமல் நான் அழுத வேளையில்
கண்ணீரை துடைத்து எந்தன் கரம் பிடித்தீரே
யாருமில்லை என்று ஏங்கும் நேரத்தில்
தோழனை போல் தோன்றி தோள் கொடுத்தீரே
உம் அன்பு போதுமே
உம் துணை போதுமே

UN NENJILAE UNDANA VISARANKALAI NEE

1. உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ
கர்த்தாவின் உண்மையான கரத்துக் கொப்புவி
விண்மண்ணை ஆண்டிருக்கும் மகா தயாபரர்
உன் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார்.

2. ஜெயமடைந்து வாழ கர்த்தாவைப் பிள்ளைபோல்
நீ நம்பி மனதார பணிந்து பற்றிக்கொள்
உன் கவலைகளாலே பயம் ரட்டிக்குது
வேண்டாம் ஜெபத்தினாலே நீ வேண்டிக்கொண்டிரு.

3. இக்கட்டுகளினாலே கலங்கினோனே நீ
திடன்கொள் கர்த்தராலே இக்கட்டின் ராத்திரி
சந்தோஷமாக மாறும் சற்றே பொறுத்திரு
நீ பூரிப்பாய்க் கொண்டாடும் நாள் வரப்போகுது.

4. கர்த்தாவே எங்களுக்கு எல்லா இக்கட்டிலும்
ரட்சிப்பளிப்பதற்கு நேரிட்டுக்கொண்டிரும்
ஆ எங்களைத் தேற்றிடும் பரகதிக்குப் போம்
வழியிலும் நடத்தும் அப்போ பிழைக்கிறோம்.