Sunday, December 20, 2015

Um irathamea um irathamea

உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமே
உம் இரத்தமே என் பானமே

பாய்ந்து வந்த நின் ரத்தமே
சாய்ந்தோர்கட்கு அடைக்கலமே
பாவிகள் நேசர் பாவி என்னை
கூவி கழுவினீர் என்னை

நெசர் சிலுவை சத்தியம்
நாசம் அடைவோர்க்குப் பைத்தியம்
இரட்சிப்படைவோர் சத்தியம்
நிச்சயம் காப்பார் நித்தியம்

நின் சிலுவையில் சிந்திய
வன்மையுள்ள இரத்தத்தினால்
என் பாவத்தை பரிகரித்தீர்
அன்புள்ள தேவ புத்திரா

பன்றி போல் சேறில் புரண்டேன்
நன்றி இல்லாமல் திரிந்தேன்
கரத்தால் அரவணைத்தீர்
வரத்தால் ஆசீர்வதித்தீர்

விழுங்கப் பார்க்கும் சாத்தானை
மழுங்க வைத்தீர் அவனை
புழங்காமல் போக்கினானே
களங்கமில்லா கர்த்தரே

ஐயனே உமக்கு மகிமையும்
துய்யனே துதி கனமும்
மெய்யனே எல்லா வல்லமையும்
உய்யோனே உமக்கல்லேலூயா

kolkathaa meattinilea kodura paavi

கொல்கொதா மேட்டினிலே
கொடூர பாவி எந்தனுக்காய்
குற்றமில்லாத தேவ குமாரன்
குருதி வடிந்தே தொங்கினார்

பாவ சாபங்கள் சுமந்தாரே
பாவியை மீட்க பாடுபட்டார்
பாவமில்லாத தேவகுமாரன்
பாதகன் எனக்காய் தொங்கினார்

மடிந்திடும் மன்னுயிர்க்காய்
மகிமை யாவும் இழந்தோராய்
மாசில்லாத தேவகுமாரன்
மூன்றாணி மீதினில் தொங்கினார்

இரத்தத்தின் பெருவெள்ளம் ஓட
இரட்சிப்பின் நதி என்னில் பாய
ஆதரவில்லா தேவகுமாரன்
அகோரக் காட்சியாய் தொங்கினார்

கல்வாரி காட்சி இதோ
கண்டிடுவாயே கண்கலங்க
கடின மனமும் உருகிடுமே
கர்த்தரின் மாறாத அன்பி னிலே

உள்ளமே நீ திறவாயோ
உருகும் சத்தம் நீ கேளாயோ
உன் கரம் பற்றி உன்னை நடத்த
உன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்

Appa um paatham amarnthuvitten

அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானைய்யா
செய்த பாவங்கள் கண்முன்னே
வருந்துகிறேன் நான் கண்ணீரோடு

என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
கல்வாரி இரத்தத்தாலே
நான் பனியைப் போல வெண்மையாவேன்
முற்றிலும் வெண்மையாவேன்
இயேசையா(4)

துணிகரமாய் நான் தவறு செய்தேன்
துணிந்து பாவம் செய்தேன்
நோக்கிப் பார்க்க பெலனில்லையே
தூக்கி நிறுத்தும் என் தெய்வமே - என்னைக்

கிழக்கு மேற்கு உள்ள தூரம்
உந்தன் இரக்கம் உயர்ந்ததையா
இல்லையே எல்லை உம் அன்பிற்கு
இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யா

என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்
உம்முன்னே நிற்க முடியாதையா
தகப்பன் மகனை மன்னிப்பதுபோல்
மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா

முள்முடி கிரீடம் பார்க்கின்றேன்
முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன்
ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா
தேவனே நான் என்ன சொல்வேன்

அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானையா
கிருபையின்படியே மனமிரங்கி
மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா
இயேசையா நன்றி(4)

Maanida Uruvil

மானிட உருவில் அவதரித்த
மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே

ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த
அவனியிலே உனக்காய் உதித்தார்
அண்டி வருவாய் வேண்டி அடைவாய்
அண்ணலே ஆத்தும வினை நீக்குவார்

கூவி அழைப்பது தேவ சத்தம்
குருசில் வடிவது தூய ரத்தம்
பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு
பாக்கியம் நல்கிட அவரே வழி

இயேசுவின் நாமத்தில் வல்லமையே
இதை நாடுவோர்க்கு விடுதலையே
துன்ப கட்டுகள் காவல் சிறைகள்
இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா

அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்
அதிசயங்கள் அவர் காட்டிடுவார்
உண்மை நிறைந்த உள்ளம் திறந்து
உன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய்

கர்த்தர் உன்னை இனி கைவிடாரே
கடைசி வரை தளராதே நம்பு
என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர்
இயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார்

Kalvari mamalai oram

கல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோ

எருசலேமின் வீதிகளில்
இரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் நிந்தனையால்
உருக்குலைந்து சென்றனரே

சிலுவை தன் தோளதிலே
சிதறும் தன் வேர்வையிலே
சிறுமை அடைந்தவராய்
நிந்தனை பல சகித்தார்

Pothumanavarea Puthumaiyanavare

போதுமானவரே புதுமையானவரே
பாதுகாப்பவரே என்பாவம் தீர்த்தவரே
ஆராதனை (2)
ஆயுளெல்லாம் ஆராதனை

எனக்காக தண்டிக்கப்பட்டீரே
அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
எனக்காக காயப்பட்டீரே
அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்

பாவங்கள் சுமந்ததனால் நான்
நீதிமானாய் மாற்றப்பட்டேன்
மரணத்தை ஏற்றுக் கொண்டதால் நித்திய
ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா

எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்
எனக்காக அவமானமடைந்து உம்
மகிமையிலே பங்குபெறச் செய்தீர்

சிலுவையிலே ஏழ்மையானதால் என்னை
செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே நீர்
சாபங்களை சுமந்து கொண்டதால் நான்
ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன்

Jeeva kristhu uyirthelunthar

ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்
தேவ குமாரன் மரித்தெழுந்தார்
பாவங்கள் போக்க பாவியை மீட்க
பலியான இயேசு உயிர்த்தெழுந்தார்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா கிறிஸ்து உயிர்த்தார்
அல்லேலூயா கல்லறைக் காட்சி
அற்புத சாட்சியே -ஆண்டவர்
இயேசு உயிர்த்தெழுந்தார்

பாதாளம் யாவும் மேற்கொண்டவர்
வேதாள கூட்டம் நடுங்கிடவே
அன்றதிகாலை மா இருள் வேளை
மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்

நாம் தொழும் தேவன் உயிருள்ளவர்
நம் கிறிஸ்தேசு பரிசுத்தரே
சாவை ஜெயித்து காட்சி அளித்து
சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்

பூரிப்புடன் நாம் பாடிடுவோம்
பூலோக மெங்கும் சாற்றிடுவோம்
என் மன ஜோதி தம் அருள் ஆவி
என் உள்ளம் ஊற்ற உயிர்த்தெழுந்தார்

நல் விசுவாசம் தந்திடுவார்
நம்பிடுவோரை எழுப்பிடுவார்
எக்காள சத்தம் கேட்டிட நாமும்
ஏகுவோம் மேலே ஜெயித்தெழுந்தே