Sunday, September 6, 2015

ANBIN AANDAVARE AATHMA AMAITHI THANTHEER

அன்பின் ஆண்டவரே
ஆத்ம அமைதி தந்தீர்
அன்பில் இறுக்கம்
பண்பில் ஒழுக்கம்
என்றும் காத்திடுவீர் - இயேசுவே -(2)

1. சொந்தப் பிள்ளையாக
எட்டிக் காயுமான
இந்தப் பாவியையும்
பங்கம் பாசம் காட்டி

அன்பிதோ துதிப்பேன்
அன்பிதோ மகிழ்வேன்
ஆத்ம அமைதி தந்தீர் - இயேசுவே
ஆத்ம அமைதி தந்தீர் - அன்பின்

2. வாழ்நாள் முடிவுவரை
தேவ பணிபுரிவேன்
கள்ளம் கபடு இன்றி
கர்த்தர் வழியில் செல்வேன்

அன்பிதோ துதிப்பேன்
அன்பிதோ மகிழ்வேன்
ஆத்ம அமைதி தந்தீர் - இயேசுவே
ஆத்ம அமைதி தந்தீர் - அன்பின்

EN AATHMA NESAR YESUVAI

என் ஆத்தும நேசர் இயேசுவை
நான் அண்டிக் கொள்வேனே (4)
1. நிலையில்லா என்னைக் கண்டிட்டார்
நித்திய வழிக்குள் நடத்திட்டார்
விலையில்லா இரத்தம் சிந்தினார்
விந்தையாய் என்னைச் சந்தித்தார்
பரகதி வாழ்வை தந்தவர்
பரமன் இயேசு கர்த்தரே
நித்திய வழிக்குள் நடத்தியவர்
நிதம் அவர் துதி நான் பாடிடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா -- அல்லேலூயா --- என்
2. பாவத்தை கழுவி பரிகரித்தார்
சாபத்தை நீக்கி சங்கரித்தார்
லாபம் இன்றென் ஜீவனே
தாபம் எனக்கினி அவர்தானே --- பரகதி

3. என்னையே மீட்க என் இயேசு
தன்னையே தியாகம் செய்தாரே
அன்னையாய் அப்பனாய் ஆனவர்
உன்னையும் அன்பாய் அழைக்கிறார் --- பரகதி

EN AAVI AATHMA THEGAMUM ITHO

1. என் ஆவி ஆன்மா தேகமும்
இதோ படைக்கிறேன்;
என்றும் உம் சொந்தமாகவும்
பிரதிஷ்டை செய்கிறேன்.

2. ஆ, இயேசு, வல்ல ரட்சகா
உம் நாமம் நம்புவேன்;
ரட்சிப்பீர், மா தயாபரா,
உம் வாக்கை வேண்டுவேன்.

3. எப்பாவம் நீங்க, உறுப்பு
தந்தேன் சமூலமாய்;
போராட்டம் வெற்றி சிறப்பு
படைக்கலங்களாய்.

4. நான் உம்மில் ஜீவித்தல் மகா
மேலான பாக்கியம்;
தெய்வ சுதா, என் ரட்சகா,
என் ஜீவனாயிரும்.

5. என் நாதா, திரு ரத்தத்தால்
சுத்தாங்கம் சொந்தமே;
ஆனேன்! உம் தூய ஆவியால்
பலி நான் உமக்கே.

EN YESUVE NAAN ENDRUM UNTHAN SONTHAM

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்
1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2)
உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன் --- என்

2. அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே (2)
வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர் --- என்

3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே (2)
ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன் --- என்

EN JEBAVELAI VANJIPPEN

1. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
அப்போதென் துக்கம் மறப்பேன்!
பிதாவின் பாதம் பணிவேன்
என் ஆசையாவும் சொல்லுவேன்!
என் நோவுவேளை தேற்றினார்
என் ஆத்ம பாரம் நீக்கினார்
ஒத்தாசை பெற்றுத் தேறினேன்
பிசாசை வென்று ஜெயித்தேன்

2. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்
மன்றாட்டைக் கேட்போர் வருவார்
பேர் ஆசீர்வாதம் தருவார்
என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்
என் பாதம் தேடு ஊக்கமாய்
என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்
இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன்

3. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
ஆனந்த களிப்படைவேன்
பிஸ்காவின் மேலே ஏறுவேன்
என் மோட்ச வீட்டை நோக்குவேன்
இத்தேகத்தை விட்டேகுவேன்
விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்
பேரின்ப வீட்டில் வசிப்பேன்
வாடாத க்ரீடம் சூடுவேன்!

IVVULAGA MAKKALILE ANBU KOLLA VANTHAR

இவ்வுலக மக்களிலே அன்பு கொள்ள வந்தார்
அந்த இறைவனின் அன்பினையே
ருசித்துப் பாராயோ நீ ருசித்துப் பாராயோ
இவ்வுலக மக்களிலே அன்பு கொள்ள வந்தார்

1. கடவுளின் சாயலிலே படைக்கப்பட்டான் மனிதன்
கீழ்படியாமையால் இழந்தான் கர்த்தர் சமூகந்தனை
ஆயினும் வாக்களித்தார் ரட்சகரை நமக்கே
பாருலகை மீண்டும் தம்மோடு ஒப்புரவாக்க

2. படைத்தார் இப்பாருலகை படைத்தே பராமரித்தார்
நாம் பாவமே செய்தாலும் அழித்திட துணியவில்லை
படைப்பின் நீதினிலே பரிவும் அன்பும் கொண்டார்
பாவத்தையே வெறுத்தார் பாவியையோ நேசித்தார்

3. இறைவன் நமக்களித்த வாக்குதத்தங்கள் எல்லாம்
கிறிஸ்துவாம் உலக ரட்சகர் ஆண்டவரில் ஆம் என்றும்
இறைவனுக்கு மகிமை உண்டாகும் படி நம்மில்
இயேசு கிறிஸ்துவினால் ஆமேன் ஆமேன் என்றேன்

paareer gethsamane poongavil enn nesaraiye

பாரீர் கெத்சமனே
பூங்காவில் என் நேசரையே
பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே

சரணங்கள்

1. தேகமெல்லாம் வருந்தி
சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏகசுதன்
படும் பாடு எனக்காகவே --- பாரீர்

2. அப்பா என் பாத்திரமே
நீக்கும் நின் சித்தமானால்
எப்படியாயினும் சித்தம் செய்ய என்னை
தத்தம் செய்வேன் என்றாரே --- பாரீர்

3. ரத்தத்தின் வேர்வையாலே
மெத்தவும் நனைந்ததே
இம்மானுவேல் உள்ளம் உருகியே
வேண்டுதல் செய்தாரே --- பாரீர்

4. மும்முறை தரைமீது
தாங்கொணா வேதனையால்
உன்னதன் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே
பாதகன் மீட்புறவே --- பாரீர்