Saturday, July 25, 2015

MATHA UN KOVILIL LYRICS

மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாய் என்று உன்னைத் தான் - 2
பிள்ளைக்குக் காட்டினேன் மாதா

மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே - 2
மேரி உன் ஜோதி கொண்டால் விதிமாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா - மாதா

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே - 2
கரை கண்டிலாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ - மாதா

பிள்ளை பெறாத பெண்மை தாயானது - 2
அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா

IDAIVIDA SAHAYA MATHA LYRICS

இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா 
பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள் 
நிதம் துணை சேர்ப்பாயே - 2

ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் - அன்னை 
தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் - 2 
மாறாத கொடுமை நீங்காத வறுமை 
தானாக என்றுமே மாற்றிடுவாள் - 2

கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி 
உள்ளம் திறந்து சொல் உன் கதையை - 2 
வெள்ளம் போல அருள் கருணை பாய்ந்திட 
தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய் - 2

Amma Anbin Sikaram Nee

அம்மா அன்பின் சிகரம் நீ
அருளைப் பொழியும் முகிலும் நீ
அம்மா அழகின் முழுமை நீ
அம்மா என்றதும் கனிபவள் நீ
அம்மா அன்பின் சிகரம் நீ

மாசுடன் பிறந்த மனுக்குலத்தில்
மாசின்றிப் பிறந்த மாணிக்கம் நீ  -2
இயேசுவை அணைத்த கரங்களினால்
சேயரை அணைத்திடாய்த் தாய்மரியே

புழுதியில் பிறந்தோர் புழுதி சென்றார்
பழுதிலா உனக்கோர் அழிவுண்டோ  -2
மனிதனின் மாளிகை தகர்ந்துவிடும்
மாபரன் ஆலயம் தகர்தலுண்டோ

Katthum Alaikadal Oorathilae

அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர்
இன்று புவியெல்லாம் நீள்கடலாய் ஆனதம்மா
ஒன்றுதான் தெய்வமென உலகிற்குக் காட்டிடவே
இறைவனைக் குழந்தையாய் இடையில் சுமந்தவளே
 
கத்தும் அலைகடல் ஓரத்திலே அன்புத்தாங்கியே வந்தவளே - 2
சித்தம் இரங்கியே வேளைநகர் வந்தே
ஆரோக்கியம் தந்தவளே அம்மா - 2

வித்தகன் இயேசுவைப் பெற்றவள் நீயே
உத்தமர்க்கெல்லாம் நீ உற்றவள் தாயே - 2
சத்திய சன்மார்க்கம் தழைக்கச் செய்தாயே - 2
இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீயே
இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீ

நித்தம் உன் தாள் தேடி வருவார்கள் கோடி
நெஞ்செல்லாம் இனித்திடும் சுவையாகப் பாடி - 2
முக்திக்கு வழிசொன்ன இறைமகன் தாயே - 2
சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீயே
சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீ

Alaikadalin Oosaiyilae

அலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மா
அன்னையவள் ஆலயத்தில் அருள் நிறைந்து காணுதம்மா --2

நொண்டி முடம் கூன் குருடு நோய்களெல்லாம் தீர்ந்திடவே --2
அண்டி வந்த அனைவருக்கும் அருள்வழங்கும் அன்னையம்மா --2

கண்கவரும் ஆலயமும் காணிக்கைப் பொருளனையும் --2
எண்ணில்லாக் கவிதைகளை என்றென்றும் கூறுதம்மா --2

வேளைநகர் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னையிவள் --2
வேண்டும் வரம் தந்திடுவாள் வேதனைகள் தீர்த்திடுவாள் --2

Mathave Thunai Neerae

மாதாவே ! துணை நீரே உம்மை
வாழ்த்திப் போற்ற வரந்தாரும்
ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா !
ஏற்றன்பாக எமைப் பாரும்.

வானோர் தம் அரசே ! தாயே எம்
மன்றாட்டைத் தயவாய் கேளும்
ஈனோர் என்றெமை நீர் தள்ளாமல்
எக் காலத்துமே தற் காரும்.

ஒன்றே கேட்டிடு வோம் தாயே நாம்
ஓர் சாவான பவந்தானும்
என்றேனுஞ் செய்திடாமற் காத்து
எம்மைச் சுத்தர்களாய்ப் பேணும்

Monday, July 20, 2015

Kuyavane um kaiyil kaliman naan

குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும்
என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே

என்னைத் தருகிறேன் தருகிறேன்
உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
படைக்கிறேன் உம் பாதத்தில்

உம் சேவைக்காக என்னை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம் போல்
எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
உருவாக்குமே உருவாக்குமே

உமக்காகவே நான் வாழ்ந்திட
வனைந்திடும் உம் சித்தம் போல் -உம்
சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
உருவாக்குமே உருவாக்குமே

உம் வருகையில் உம்மோடு நான்
வந்திட என்னை மாற்றுமே ஓய்வின்றி
உம்மைப் பாட ஓயாமல் உம்மைத் துதிக்க
உருவாக்குமே உருவாக்குமே