Saturday, May 18, 2024

YESUVAIYE THUTHI SEI NEE MANAME ஏசுவையே துதி செய் கீர்த்தனை

ஏசுவையே துதி செய் கீர்த்தனை


ஏசுவையே துதி செய் , நீ மனமே

ஏசுவையே துதி செய்

சரணங்கள்

மாசணுகாத பராபர வஸ்து 
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து 

அந்தர வான் நரையுந் தரு நந்தன
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன 

எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க 

YUDHA RAJASINGAM UYIRTHELUNTHAR யூத ராஜ சிங்கம் கீர்த்தனை


யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்,
உயிரித்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார்.-

சரணங்கள் 
வேதாளக் கனங்கள் ஓடிடவே.
ஓடிடவே,உருகி வாடிடவே.-- யூத 

வானத்தின் சேனைகள் துதித்திடவே ,
துதித்திடவே பரனைத் துதித்திடவே .-யூத 

மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்ட்ன,
தெறிபட்டன, நொடியில் முறி பட்டன . -யூத 

எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே ,பயத்தை என்றும் நீக்குதே.- யூத 

மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார் 
அக மகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார்-யூத 

மரித்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை ,
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை .- யூத 

கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம் ,
பாதம் பணிவோம், பதத்தை ச சிரமணிவோம்.

KANGALAI YERUDUPPEN MAAMERUNERAI கண்களை ஏறெடுப்பேன்



கண்களை ஏறெடுப்பேன் மாமேருநேராய் என்

கண்களை ஏறெடுப்பேன்

அனுபல்லவி
விண் மண் உண்டாக்கின வித்தகனிட மிருந்
தெண்ணிலா வொத்தசை எந்தனுக்கே வரும்

காலைத் தள்ளாட வொட்டார்,உறங்காது காப்பவர்
காலைத் தள்ளாட வொட்டார்
வேலையில் நின் ரிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங் காரவர்.-

பக்க நிழல் அவரே -எனை ஆதரித்திடும்
பக்க நிழல் அவரே 
எக்கால நிலைமையும் எனக் சேதப் படுத்தாது
முக்காலம் நின்ரென்னை நற் காவல் புரியவே .-

எல்லாத் தீமை கட்கும் என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும் ,
பொல்லா உலகினில் போக்கு வரத்தையும் 
நல்லாத்தூமாவையும் நாடோறும் காப்பவர்

AAVIYAI MAZHAI POLE YUTRUM ஆவியை மழை போலே யூற்றும் கீர்த்தனை

ஆவியை மழை போலே யூற்றும் கீர்த்தனை 


பல்லவி

ஆவியை மழை போலே யூற்றும் -பல
ஆடுகளை ஏசுமந்தையிற் ம்ந்தையிற் கூட்டும்

அனுபல்லவி 
பாவிக்காய் ஜீவனை விட்ட கி றிஸ்தே
பரிந்து நீர் பேசியே இறங்கி டச்  செய்யும் .-

சரணங்கள்
அன்பினால் ஜீவனை விட்டீர் ;- ஆவி 
அருள் பொழியவே பரலோகஞ் சென்றீர் 
இன்பப் பெருக்கிலேபொங்கி மகிழ 
ஏராளமான ஜனங்களைச் சேரும் .-

சிதறுண்டலைகிற ஆட்டைப பின்னும் 
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து ,
பதறாதே நான் தான் நல் மேய்ப்பன் யேசு 
பாக்கியரென்னும் நல் வாக்கை யருளும் .

காத்திருந்த பல பேரும் - மன்ங்
கடினங் கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்;
தோத்திர கீதங்கள் பாடிப் புகழ்ந்து 
சுத்த லோகம் வரத் தூயாவி ஊற்றும்

தோத்திர கீதங்கள் பாடி எங்கும் 
சுவிஷேச ஜெயததையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேக ரெழும்ப 
பரிசுத்த ஆவியின் அருள் மாரி ஊற்றும்

AAVIYAI ARULUME SWAMY ஆவியை அருளுமே, சுவாமீ கீர்த்தனை

ஆவியை அருளுமே, சுவாமீ 


பல்லவி

ஆவியை அருளுமே, சுவாமீ,-எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே

சரணங்கள்
நற்கனி தேடிவருங் காலங்களல்லவோ?
நானொரு கனியற்ற பாழ் மர மல்லவோ 
முற் கனி முக் காண வெம்பயி ரல்லவோ?
முழு நெஞ்சம் விளை வற்ற உவர் நில மல்லவோ ?

பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம் 
பரம் சந்தோஷம் , நீடிய சாந்தம்,
தேவ சமாதானம், நற்குணம் , தயவு 
திட விசுவாசம் சிறிதெனுமில்லை .-

தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊறறும்
திரி யவியாமலேதீண்டியே யேற்றும் ,
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,
பரிசுத்த வரந் தந்தென் குறைகளைத் தீரும் 

THANTHEN ENNAI YESUVE தந்தேன் என்னை இயேசுவே கீர்த்தனை

தந்தேன் என்னை இயேசுவே கீர்த்தனை 


பல்லவி

தந்தேன் என்னை இயேசுவே ,
இந்த நேரமே உமக்கே

அனுபல்லவி
உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும்-

சரணங்கள்

ஜீவ் கால்ம் முழுதும் 
தேவபணி செய்திடுவேன்.
பூவில் கடும் போர்புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து 

உலகோர் என்னை நெருக்கிப 
பலமாய் யுத்த்ம் செய்திடினும் ,
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு 
நானிலத்தில் நாதா வெல்லுவேன் .-

கஷ்ட நஷ்டம் வந்தாலும் 
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே 
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் .-

உந்தஞ் சித்தமே செய்வேன் 
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன் .
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன் .-

ஒன்றுமில்லை நான் ஐயா!
உம்மலான்றி ஒன்றும் செய்யேன் .-
அன்று சிஷர்க் களித்த ஆவியால் 
இன்றே அடியேனை நிரப்பும் .

Wednesday, May 8, 2024

SUTHA AAVI ENNIL THANGUM சுத்த ஆவி என்னில் தங்கும் , நானும்


1.சுத்த ஆவி என்னில் தங்கும் , நானும் சுத்தன் ஆகவே :
   பாவ அழுக்கெல்லாம் நீக்கும் ;உம ஆலயமாகவே
   என்னை நீர் சிங்காரியும் வாசம் பண்ணும்  நித்தமும் 

2. சத்திய ஆவி, என்னில் தங்கும் , நானும் சத்யன் ஆகவே :
   தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே :
   நீர் என்னில் பிரவேசியும் , ஆண்டு கொள்ளும் நித்தமும் .

3. நேச ஆவி , என்னில் தங்கும் நானும் நேசன் ஆகவே :
   துர்ச் சுபாவம் போகப் பண்ணும் : அன்பில் நான் வேரூன்றவே
   அன்பின் ஸுவாலை எழுப்பும் , மென் மேலும் வளர்ந்திடும். 

4. வல்ல ஆவி என்னில் தங்கும் ; நானும் வல்லோன் ஆகவே ;
   சாத்தான் என்னை தூண்டிவிடும்  போது  ஜெயங் கொள்ளவே
   நீர் என் பக்கத்தில் இரும் என்னை பலப்படுத்தும்.

5. நல்ல ஆவி என்னில் தங்கும்  நானும் நல்லோன் ஆகவே ;
   பகை மேட்டிமை , விரோதம் மற்றும் தீமை யாவுமே
   என்னை விட்ட கற்றுமேன், என்னை  சீர்ப்படுத்துமேன்